செங்கல்பட்டு ஜி.எஸ்.டி.சாலையில் அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக்கின் பிரமாண்ட திறப்பு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றதது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நீரிழிவு நோய் நிபுணர்
பேராசிரியர் டாக்டர். என். ராஜேந்திரன்
சின்னதிரை நடிகை சைத்ரா ரெட்டி
அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக்கின் பிராண்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சரண் வேல் ஆகியோர் கலந்து ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தனர்
அதனை தொடர்ந்து
செங்கல்பட்டு கிளை பார்ட்னர் டாக்டர். ஆர்.ரம்யா வேல்முருகன் மற்றும் ஆர் அனிதா, சின்னதிரை நடிகை சைற்றா ரெட்டி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
பின்னர் புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, நடிகை சைத்ரா ரெட்டி, உடல் நலத்தை பாராமரித்து கொள்ளுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அழகை பாராமரிப்பது மிகவும் அவசியமானது என தெரிவித்தார்.
அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக்கின் பிராண்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சரண் வேல் கூறும்போது, தலை முடி வளர கூகுளை தேடினால் பயனில்லை; கூகுளில் அமேஷன் காடு மரத்தில் இருந்து வரும் எண்ணெயை தேய்த்தால் முடி வளரும் என்பது எல்லாம் உண்மை இல்லை என தெரிவித்தார்.