நாகர்கோவில் டிச 3
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, தோவாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசாந்திமங்கலம் ஊராட்சியில் சிவன் கோயில் அருகே அமைந்துள்ள தெப்பக்குளத்தினை சுற்றி காங்கிரீட் தளம் அமைக்க வேண்டியும், இதனைப் போன்று ஈசாந்திமங்கலம் கீழூர் தெற்கு தெரு பகுதியிலும் காங்கிரீட் தளம் அமைக்க கோரியும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரதிடம் கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் இக்கோரிக்கையினை ஏற்று தளவாய்சுந்தரம் இதற்காக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025 நிதியின் கீழ் ரூ. 9 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதனடிப்படையில் நேற்று சிவன் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தினை சுற்றி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும், இதனைப் போன்று ஈசாந்திமங்கலம் கீழூர் தெற்கு தெரு பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணகுமாரி தலைமை வகித்தார். தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவரும், மாவட்ட கழக இணைச் செயலாளருமான சாந்தினிபகவதியப்பன் மற்றும் ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவரும் தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக கழகச் செயலாளருமான முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஈசாந்தியமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகந்தி, வார்டு உறுப்பினர் சிவதாணுபிள்ளை, ஈசாந்திமங்கலம் ஊராட்சி பொறுப்பாளர் சாஸ்தாங்குட்டிபிள்ளை மற்றும் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



