சங்கரன் கோவிலில் மேலரத வீதி கோகுல் திருமண மண்டபத்தில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட இளைஞர் அணியினருக்கு சமூக வலைத்தள பயிற்சி முகாம் நடைபெற்றது இம் முகாம் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை தாங்கி பேசுகையில் சென்னையில் பெரு மழை பெய்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளம் பாராது களத்தில் இறங்கி நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் உதவிகள் வழங்கி வருகின்றனர் எப்பொழுதும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க கூடிய ஒரே இயக்கம் தான் திமுக, திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது திமுக இளைஞரணியினர் சமூக வலைத்தளங்களை சிறப்பாக பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் நமது முதல்வரின் சாதனைகளை அனைவருக்கும் கொண்டு சென்று கட்சி வளர்ச்சிக்காக பணியாற்றும் படியும் இளைஞர் அணியினருக்கு மாவட்ட திமுக எப்பொழுதுமே துணையாக இருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என பல்வேறு ஆலோசனைகளை இளைஞர் அணியினருக்கு ராஜா எம்எல்ஏ வழங்கினார் இளைஞர் அணி பயிற்சி முகாமிற்கு இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் வரவேற்றார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் முகாமில் இளைஞர் அணியினருக்கு மாநில மாணவரணி துணைச் செயலாளர் அமுத அரசன் பேச்சாளர் இளமாறன் ஆகியோர் சமூக வலைத்தள பயிற்சி அளித்தனர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன் ராஜராஜன் அன்சாரி ராஜ் மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பிடித்த மோகன் நிதி மற்றும் ஒன்றிய நகர இளைஞரணியினர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் நன்றி யுரையாற்றினார்.



