திண்டுக்கல் மே:09
கோபால்பட்டியில் ஏபிஜே அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை ஹெச்.ஐ.எல். எஜுகேஷன் டிரஸ்ட் இணைந்து கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டியில் ஏபிஜே அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை ஹெச்.ஐ.எல். எஜுகேஷன் டிரஸ்ட் இணைந்து கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அப்துல்கலாம் அறக்கட்டளையின் தலைவர் சமூக சேவகர் மருதைகலாம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு ஹெச்.ஐ.எல். எஜுகேஷன் டிரஸ்ட் நிறுவனர் முனைவர் மகேந்திரபிரபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அப்துல் கலாம் இலட்சிய இந்திய இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் முருகன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். சமூக சேவகி வனிதா, ராகுல், தாமரை செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்கள்.அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, அழகு மணிசந்தோஷ்குமார் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.



