மதுரை மே 9,
மதுரை மத்திய சிறைவாசியின் நேர்மையை பாராட்டிய டிஜஜி
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது குடும்பத்தாருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மதுரையில் முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட்டு பின் மதுரையின் முக்கிய அடையாளமான மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை சந்தையை பார்வையிட்டனர் அதன் பின் அங்கு காலை உணவு அருந்தும் பொழுது அவர்கள் கொண்டு வந்த பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை மறதியாக விட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற பின் அதைக் கண்ட சிறை சந்தையில் பணி புரியும் தண்டனை சிறைவாசி கார்த்திக் அவற்றை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன.நேற்று மாலை மதுரை சரக சிறைத்துறை டி ஐ ஜி பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகளிடம் அந்த பண பை ஒப்படைக்கப்பட்டது. கால்நடை மருத்துவ தம்பதியினர் சிறைவாசி கார்த்திக் நேர்மையை பாராட்டி சென்றனர். இந்த நேர்மையான செயலை கண்ட சிறை அதிகாரிகளும் சிறைவாசியின் நேரில் சென்று அவரின் நேர்மையை பாராட்டினர் .