திருப்பத்தூர்:நவ:27, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை திறப்பு விழா மற்றும் நேரடியாக சென்று தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த், மாவட்ட செயலாளர் V C.முனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதலில் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் கிளை திறப்பு விழா மற்றும் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன சமுத்திரம் அடுத்த கிச்சனூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கிளை திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ பெரியசாமி கலந்துகொண்டு தமிழக வெற்றி கழகத்தின் கொடியேற்றி வைத்து பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இணைச் செயலாளர்கள் முனிராஜி, வேலு, ஒன்றிய நிர்வாகிகள் கலையரசன், சௌந்தர்ராஜன், கீழ் அச்சமங்கலம் ஊராட்சி செயலாளர் பிரபு, ரகு,ஏசு, மேல் அச்சமங்கலம் ஊராட்சி செயலாளர் திருமலை மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.