தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ தட்சண காசி காலபைரவர் திருக்கோவில் 1200 வருடம் பழமை வாய்ந்தது. இத்திருக்கோவிலில்கால பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாமிக்கு கணபதி ஹோமம், 64 பைரவர் ஓமம், 108 சங்கு அபிஷேகம்,108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. . ஸ்ரீ கால பைரவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பவித்தார். இவ்விழாவை முன்னிட்டு உற்சவர் திருத்தேரில் திருக்கோவிலை சுற்றி வளம்வந்தார். இதில் சேலம், கிருஷ்ணகிரி மற்றும் பல மாவட்டத்தில் இருந்தும், கர்நாடகா, கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இத் திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



