ராமநாதபுரம், நவ.24-
சிவகங்கை மாவட்டம், சடையன்காடு, சண்முகநாதபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் சவரிமுத்து என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 11-11-2024 திங்கட்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன ஆல்பர்ட் உறவினர்
தமுமுக மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்
ஜவாஹிருல்லாவிடம் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சவுதி மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள்
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் ஆலோசனைப்படி
தாயகம் அனுப்பி வைத்தனர்.
இந்திய தூதரகத்தின் முழு உதவியுடன் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் பணிகளை முடித்து
22.11.2024 , வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஆல்பர்ட்டின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இறந்தவரின் உறவினர்களும் ஆல்பர்ட்டின் உடலை பெற்று
இராமநாதபுரம் மாவட்ட,
தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஆல்பர்ட்டின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், சடையங்காடு சண்முகநாதபுரத்தில் உள்ள அவர்களுடைய இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.
ஆல்பர்ட் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் ஆல்பர்ட் உடலை சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து சேர்த்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.