தென்காசி நவ. 24
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார். பின்பு தென்காசி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சம் அழகை பேணி பாதுகாக்கும் விதமாக மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதை தொடர்ந்து மாவட்டத்தில் இந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகனுக்கு நற்சான்றிதழை வழங்கி ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் உடனிருந்தார்.