அரியலூர், நவ;23
இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்தல் சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில்
அரியலூர் – பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமிற்கு விழிப்புணர்வு நடைபெற்றது.
ஒரு விரல் புரட்சி 18 வயது ஆகிவிட்டதா?
மக்களே உடனே நாளை வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள் நாளைய வரலாற்றில் ஒரு தலைவரை தேர்ந்தெடுங்கள் இது ஒரு விரல் புரட்சி என்னும் குறிக்கோளோடு செந்துறை ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அரியலூர் மாவட்ட தொண்டரணி தலைவர் மோகன்ராஜ் தலைமையில், மாவட்ட தொண்டர் அணி துணை தலைவர் ஜாபர் அலி மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் விக்னேஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் , இதில் ஒன்றிய நிர்வாகிகள் அப்பு,சரவணன், வினோத் மற்றும் ஜீவா,விக்கி,மெர்சல் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரம் வழங்க தவெக கட்சி கொடியுடன் செந்துறை பேருந்து நிலையத்தில் நாளை நடை பெற உள்ள வாக்காளர் சிறப்பு முகாமிற்கான விழிப்புணர்வு நோட்டீசை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்