மதுரை மே 8,
மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கருணை இல்லத்தில் சேர்ந்து தங்கி கல்வி பயில 2024-2025 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் அருள்மிகு சுந்தரராசா துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு ஆதரவற்ற மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு மட்டும் விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. குழந்தையின் படிப்புச் செலவு. உணவு மற்றும் சீருடைகள் என அனைத்துச் செலவுகளும் இத்திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும். ஆதரவற்ற சிறுமிகள் கீழ்க்கண்ட நிபந்தனையின் படி இக்கருணை இல்லத்தில் தங்கி படிக்க அனுமதி உண்டு. 1. தாய், தந்தையர் ஒருவரோ அல்லது இருவரும் இல்லாத ஆதரவற்ற சிறுமியாக இருக்க வேண்டும், 2. வயது 5 முதல் 14 வயதிற்குள் சிறுமியின் வயது இருக்க வேண்டும். 3. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகள் மேற்படி இருப்பவர்களாக இருந்தால் கருணை இல்லத்தில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தினை இத்திருக்கோயில் அலுவலகத்தில் வந்து அலுவலக வேலை நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.



