நாகர்கோவில் – நவ- 20,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பின் சார்பில் அகில உலக மீனவர் தினம் வரும் 21- ஆம் தேதி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் வைத்து கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய அலுவலகத்தில் அதன் இயக்குனர் பங்குதந்தை டன்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் :-
இந்தியா முழுவதும் கடலையும், கடல் வளங்களையும் நம்பி வாழும் மீனவ சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும், தமிழகத்தில் கடலோடிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் 1979 வரை இருந்தது போன்று கடற்கரை கிராமங்களை தனித்தனி கிராம ஊராட்சிகளாக மறு வரையறை செய்ய வேண்டும் , குமரி மாவட்டத்தில் மீன் பிடி துறைமுகங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும், ஆங்காங்கே சிறு, சிறு, துறைமுகங்கள் அமைக்க வேண்டும், முன்னாள் அமைச்சர் லூர்து அம்மாள் சைமன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய – மாநில அரசுகளுக்கு முன் வைக்கப்பட்டன. வரும் நவம்பர் 21- ஆம் தேதி நடைபெற உள்ள மீனவர்தின விழாவிலும் இந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும்
மேலும் மாநாட்டு கூட்டமானது மேதகு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் . நசரேன் சூசை, மேனாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் , ஆசியோடு மாநாட்டு கூட்டமானது 21.11.2024 அன்று மாலை 4.30 மணியளவில் நாகர்கோவில் நாகராஜா திடலில் வைத்து நடைபெறும் . இவ் விழாவில் சிறப்பு சேர்க்கும் வகையில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் மற்றும் உயர்கல்வி மற்றும் பால் வள மேம்பாட்டு துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் , திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் இராபர்ட் ப்ரூஸ், திருவெற்றியூர் சட்ட மன்ற உறுப்பினர் சங்கர், குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மற்றும் குமரி மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், அரசு அதிகாரிகள் , மீன் வளத்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், மற்றும் சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள், மீனவ தலைவர்கள் மற்றும் அனைத்து மீனவ மக்களும் கலந்து கொள்கின்றனர் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தெற்காசிய மீனவ கூட்டமைப்பு பொது செயலாளர் அருட் பணியாளர் சர்ச்சில், மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.