கொட்டாரம் நவ 11
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கொட்டாரம் தனியார் மாஹலில் ஒன்றிய செயலாளர் பா.பாபு தலைமையில் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஷ் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் என். தாமரை பாரதி, பார்த்தசாரதி, பேரூர் செயலாளர்கள் எஸ்.வைகுண்ட பெருமாள், குமரி ஸ்டீபன், புவியூர் காமராஜ், சுதை சுந்தர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல், ஒன்றிய பொருளாளர் எட்வின்ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பிரேமலதா, பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிகள் தமிழ்மாறன், தனசம்பத், மெனாண்டஸ், மணி உட்பட வாக்குச்சாவடி பாக முகவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.