ஈரோடு,நவ.11-
பெருந்துறை கொங்கு என் ஜினீயரிங் கல்லூரியில் 36-வது பட்டமளிப்பு விழா கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை தலை வர் டாக்டர் ஆர்.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. தாளாளர் ஏ.கே இளங்கோ முன்னிலை வகித்தார். முதல்வர் பாலுசாமி வரவேற்றார்.
விழாவில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்க லைக்கழக துணை வேந்தர் டி.கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த மாணவ- மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி பேசினார்.
இதில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த 1,593 பேருக்கும் முதுகலை பட்ட படிப்பு முடித்த 320 பேருக்கும்
மொத்தம் 1,913 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் இளங்கலை படிப்பு படித்த 109 பேரும், முதுகலை படிப்பு படித்த 17 பேரும் என மொத் தம் 126 மாணவ- மாணவிகள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர்.அவர்களுக்கு பதக் கங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் அறக்கட் டளை பாரம்பரிய உறுப்பி னர்கள், கல்லூரி அமைப்புக ளின் முதன்மை ஒருங்கி ணைப்பாளர்கள், பேராசிரி யர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண் டனர்.