போடி நவ 7:
போடிநாயக்கனூர் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நகராட்சி நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார்
நகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி நகரின் இதயப் பகுதிகளான கட்டபொம்மன் சிலை தேவ சிலை ரவுண்டானா மெயின் பஜார் கடைவீதி ஆகிய பிரதான தெருக்களில் பேரணியாக வந்து போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப் பொருளால் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளது
எனவே போதை பொருட்களான மது பான்பராக் கணேஷ் புகையிலை போன்ற போதைப் பொருள்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தான மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏந்திய பதாகைகளை ஏந்தியும் மாணவர்கள் விழிப்புணர்வாக சென்றது பொதுமக்களிடையே போதைப்பொருள் எவ்வளவு தீமையானது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது
இந்த விழிப்புணர்வு பேரணியில் நகராட்சி ஆணையாளர் எஸ் எஸ் .பார்கவி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் திருப்பதி போடி டி எஸ் பி பெரியசாமி நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோபிநாத் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராமன் உள்பட பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் தலைமை செயற்குழு உறுப்பினரும் போடி நகர் மன்ற உறுப்பினருமான எம் சங்கர் நன்றி கூறினார்