நாகர்கோயில், நவ- 02,
நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அழகு மீனாவை விஜய் வசந்த் எம் பி நேற்று சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து விஜய் வசந்த் எம் பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையை சீரமைக்க ரூ.14 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் வருகிற 11ஆம் தேதி போடப்படுகிறது டெண்டர் போடப்பட்டவுடன் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் இந்த சாலை சீரமைப்பின் போது மார்த்தாண்டம் பார்வதிபுரம் பாலம் மேலுள்ள சாலை சீரமைக்கப்படும் மார்த்தாண்டம் பாலத்தின் கீழ் உள்ள சாலையை சீரமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கோழி கழிவுகள் கொண்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தேங்காய் பட்டணம் துறைமுகப் பணி துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐஐடி அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் 4 வழிச்சாலை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது இந்தப் பணியை துரிதமாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நாகர்கோயில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலை மிக அருகாமையில் உள்ளது டவுன் ரயில் நிலையத்தையும் நான்கு வழிச்சாலையும் கடக்கும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் . இது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்துள்ளார் இதே போல் நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலை இணைக்கும் வகையில் சாலை அமைக்க ஆய்வு செய்யப்படும் மாவட்டத்திலுள்ள குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் மணக்குடியில் சுனாமியின் போது சேதமடைந்த இரும்பு பாலத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அகற்றுவதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார் என்று விஜய் வசந்த் எம் பி செய்தியாளர்களிடம் கூறினார்.