நாகர்கோவில் அக் 31
இந்துக்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல சங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் பாஜக கட்சியை சேர்ந்த முத்து சரவணன் அவரது தாயார் பிரபாவதி மற்றும் மனைவி அருள் ஹெலன் இணைந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேல சங்கரன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் புதிய வேட்டி சேலை இனிப்பு பட்டாசுகளையும் வழங்கி மக்களோடு மக்களாக கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணனுக்கு ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் துப்புரப் பணியாளர்கள் அனைவரும் தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்.