தேனி மாவட்டம், அக்டோ-30 தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான புத்தாடைகள் மற்றும் இனிப்புகள். வழங்கும் நிகழ்வு உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அவர்களின் தலைமையில் வட்டார வளர்ச்சி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்வில் ஆதரவற்ற 13 குழந்தைகளுக்கு கோகிலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு கருப்பையா அவர்கள் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்க ஏற்பாடு செய்திருந்தார் தேவாரம் மெர்சி கிறார் இல்லத்தைச் சேர்ந்த 13 குழந்தைகளுக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் மற்றொரு வளர்ச்சி அலுவலர் ஆகியோரால் புத்தாடைகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டது நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் பங்கு பெற்றனர் நிகழ்வை ஏற்பாடு செய்த கோகிலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. கருப்பையா அவர்களை அனைத்து அலுவலர்களும் மனதாரப் பாராட்டினர்



