நாகர்கோவில் அக் 28
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் 17 வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்ட அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் 17-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மறைந்த சங்க உறுப்பினர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன், மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சிலதா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காரவிளை செல்வன், முன்னாள் வட்ட கழக செயலாளர் அசோகன்,மாமன்ற உறுப்பினர்கள் மோனிகாவிமல், செல்வி.கௌசிகா மற்றும் பலர் இருந்தனர்.