தென்காசி மாவட்டம் மேலப்புலியூர் வீரமாமுனிவர் ஆர் சி அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது பதினொன்றாம் வகுப்பில் பயிலும் 186 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ,தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் வழங்கினர் பின்னர் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் இரண்டு மதிப்பெண்களை எடுத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பரிசுகளை வழங்கினார் நிகழ்ச்சியில் தென்காசி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் , நகர பொருளாளர் பரித் , மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர்,ஈஸ்வரன், சுப்பிரமணியன், கதிர்வேல், பத்மநாதன், கோவிந்தராஜுலு, குமாரசாமி,வீரமாமுனிவர் ஆர் சி மேல்நிலைப்பள்ளியின் தலைவர் போஸ்கோ குணசீலன் , தலைமை ஆசிரியை செசிலி அபிஷேக ரத்னா , பள்ளி ஆசிரியர்கள், பாலசுப்பிரமணியன், ஜோசப் , சந்துரு, சாரதி முருகன் , சிவராம் குமார், மாரியப்பன் , ராஜா, இசக்கிமுத்து மற்றும் காங்கிரஸ்,திமுக கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



