அரியலூர்,அக்;23
அரியலூர் மாவட்டம், செந்துறை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கம் விற்பனையாளர்களிடம் அபராத தொகையென இரு மடங்கு வசூலிப்பதை பணியாளர்களின் நலன் கருதி இந்த உத்தரவு ரத்து செய்திட வேண்டும்.
மேலும் கூட்டுறவு நியாயவிலை கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும்,
தமிழக முழுவதும் நியாய விலை கடை விற்பனையாளர்களை சொந்த மாவட்டத்திலும் குறைந்தது 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர்களுடைய குடும்பம் உள்ள ஒன்றியத்திலேயே மாற்றி தர தமிழக அரசு ஆணையிட வேண்டும். என வலியுறுத்தி முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், ஒன்றிய செயலாளர் முத்துலிங்கம், ஒன்றிய தலைவர் ரவிசந்திரன், மற்றும் செந்துறை ஒன்றியத்தில் உள்ள 9 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் 71 அங்காடி நியாய விலை கடை விற்பனையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்