வேலூர் மாவட்டம்
கைத்தறி நெசவாளர்களுக்கான கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
வேலூர் மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி கோரிக்கை
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நெசவாளர் அணி சார்பில் மாநில செயல் தலைவர் எஸ்.எம்.தேவராஜ், மாவட்ட தலைவர் கோ.ஜெயவேலு, மாநில செயற்குழு உறுப்பினர் கே.இ.சரத்சந்தர் உள்ளிட்டோர் கைத்தறித்துறை இயக்குன ருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில், தமிழகம் முழுவதிலும் கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கங்களின் உறுப்பினராக இருந்து நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு, அவர்கள் பெறும் நெசவுக்கூ லியை காசோலையாக வழங்க வேண்டும் என்ற கைத்தறித் பெ துறை இயக்குனரின் உத்தரவை தொடர்ந்து வேலூர் கைத்தறி துறை உதவி இயக்குனர், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும், வாய் மொழி உத்தரவு அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் லுங்கி உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கங்கள் தான் அதிகம். நெசவாளர்கள் பெறும் கூலி ரூ.1,000 கூட கிடையாது. அதை காசோலையாக கொடுத்தால் வாரத்தில் மூன்று நாட்கள், வங்கிகளுக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு, வேலை, வருவாய் இழப்பு, போக்குவரத்து செலவு ஏற்படும்.எனவே, நெசவாளர்களுக்கு தற்போது கூலி வழங்கும் முறையே சரியானதாக இருக்கும். காசோலை மூலம் கூலி வழங்க வேண்டும் என்ற வேலூர் உதவி இயக்குனரின் வாய்மொழி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கூறி உள்ளனர்.