தஞ்சாவூர் அக்.22.
தஞ்சாவூரில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 812 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூரில் நடைபெற்றது முகாமிற்கு முரசொலி எம்பி எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி கே ஜி நீலமேகம் மேயர் சண். ராமநாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினார் அப்போது அவர் பேசியதாவது
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக் கான ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னை திருப்பூர் கோவை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் வந்த 152 தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் 5 திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இதில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள 5ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர் டிப்ளமோ ஐடிஐ ,பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி இ படித்த இளைஞர்கள் இளம்பெண்கள் என மொத்தம் 3,859 க்கும் மேற்பட்டவர்கள்கலந்து கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 812 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 287 பேர் 2ம் கட்ட தேர்வுக்கும், 18 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்
முகாமில் மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி ,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.