நாகர்கோவில் அக் 16
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து வந்த கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் அண்மையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணியை தொடங்கி வைத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
இதையடுத்து அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்காலிகமாக நீக்கினார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் தற்காலிக பொறுப்பாளராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கத்தை நியமித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.