நாகர்கோவில் – அக்- 13,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர் சங்க 44 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மாவட்ட சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மீட்பு துறை அலுவலர் சத்திய குமார் மற்றும், மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் வேலுச்சாமி, சிவபாத சேகரன் (ஓய்வு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சங்க கௌரவ தலைவர் அப்துல்லா இஸ்மத், ஒருங்கிணைப்பாளர் மரிய ஜார்ஜ், கௌரவ ஆலோசகர் மற்றும் மாநில கூட்டமைப்பின் துணைத் தலைவர் ராஜா சிங், சந்திரா, கஸ்லின் அரியநாயகம், சுப்பையா, மகளிர் அணி செயலாளர் சத்தியவாணி முத்து ஆகியோர் முன்னிலையில் செல்வ சேகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது .
சங்க துணைத் தலைவர் ஜார்ஜ் வரவேற்புரையாற்றினார், சங்கச் செயலாளர் டேனியல் ஆண்டு அறிக்கை வாசித்தார், மாவட்ட சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை உரையாற்றினார்.
கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் சத்யகுமார் ,மாணிக்கராவ் , சட்ட ஆலோசகர் ராஜசேகர், பொருளாளர் டேனியல் ஞானரத்னம், அனைத்து ஓய்வூதிய சங்க செயலாளர் நாகர்கோவில் சசி, உதவி பேராசிரியர் இந்து கல்லூரி டாக்டர். அரவிந்த் பெருமாள், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் , மாவட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் சென்னை வேலுச்சாமி சிறப்புரையாற்றினார், வன்ரோஸ், காவலர் பால்ராஜ் ஆகியோர் சங்க மூத்த உறுப்பினர்களை கௌரவித்தனர், துணைச் செயலாளர் சாம் நெல்சன் தீர்மானங்கள் வாசித்தார், 75 வயது நிரம்பியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தல் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் மனோகர பாண்டியன் நன்றியுரை ஆற்றினார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அவைகள் :-காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களின் அடிப்படைச் சம்பளம், அமைச்சுப் பணியாளர்களின் இளநிலை உதவியாளருக்கு இணையாக உயர்த்தப்பட வேண்டும், ஜிஎஸ்டி விலக்குடன் கூடிய மருந்தகம், வரி விலக்குடன் கூடிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சென்னை மாநகரில் உள்ளது போல மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய ஆணை, பணிபுரிந்த காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க சென்றால் பயணப்படி வழங்கப்படுவதில்லை எனவே ஓய்வூதியர்களுக்கு பயணப்படி மற்றும் பயணச் செலவு நீதிமன்றத்திலேயே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட வேண்டும், ஓய்வு பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள் மரணமடைந்தால் காவல்துறை போன்று தீயணைப்புத் துறையினருக்கும் இறுதி மரியாதை செய்ய வேண்டும், மேலும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியை பார்ப்பதற்க்கு ஒரு ஓய்வு பெற்ற அதிகாரிகள் சென்றபோது கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரமாக பார்க்க அனுமதிக்கப்படவில்லை, எங்களின் பணிக்காலம் அவரது வயதும் ஒன்றாகும், பாண்டிய மன்னன் , மனுநீதி சோழன் , பாரி மன்னன் போன்றோர் நீதி தவறாமல் ஆட்சி செய்த நமது தமிழ் மன்னில் வயது முதிர்ந்தவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவர் மாவட்ட எஸ்.பி. யாக உள்ளார் . இத்தகைய செயலை ஓய்வு பெற்ற காவலர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே நாங்கள் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் , காவல் துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இதனை தெரிவித்து கடிதம் அனுப்ப உள்ளோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.