கன்னியாகுமரி,அக்.9-
பா.ஜ.,ஐ.டி.பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பால் கூறியிருப்பதாவது;
நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளித்து,தேசத்துக்கு சேவை செய்வதும்,இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பதும் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பணி.
தேர்தலுக்காக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டதில்லை. அதன் கொள்கை கொண்டவர்களுக்கு உறுதுணையாக மட்டும் தான் இருக்கும்.
தேசத்தில் ஏற்படும் இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை ஜாதி,மதம் பாராமல் அனைவரையும் ஓருயிராக எண்ணி அவர்களை மீட்க தங்கள் உயிரையும் துட்சமென நினைத்து களத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள்.
எந்த விளம்பரமும் இன்றி எத்தையோ நலத்திட்டங்களை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.சுயநலம் ஏதும் இல்லாமல் தேச நலன் மட்டுமே தன் நலன் என கருதி செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியை துவக்கி வைத்த காரணத்திற்காக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் மீது அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்திருப்பது வியக்க வைக்கிறது.அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.என்ற பேரியக்கம் பக்க பலமாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.