திருப்பத்தூர்:அக்:03, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் உத்தமர் காந்தியடிகளின் 156- வது பிறந்தநாளையொட்டி காதி கிராப்ட் சார்பில் காந்தியடிகளின் உருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, காதி கிராப்ட் பணியாளர்கள் இருந்தனர். இதனைத் தொடர்ந்து அவுசிங்போர்டு பேருந்து நிறுத்தத்தில் உள்ள காந்தியடிகளின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



