கடலாடி யூனியனில் உதவி கலெட்டரை கண்டித்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியனில் ஊராட்சி மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து இராமநாதபுரம் மாவட்ட உதவி கலெக்டர் கோப்புகளை ஆய்வு செய்துள்ளார்.இதில் ஊராட்சிமன்றத்தலைவர்கள் ,ஊராட்சிசெயலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.அப்போது பணிகள் முறையாக நடக்கவில்லை என ஊராட்சிமன்ற தலைவர்களை பதவியை ராஜினமா செய்துவிட்டு போகவேண்டிதானே என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.இதை கண்டித்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் வெளிநடப்பு செய்து யூனியன் வாயிலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



