தஞ்சாவூர் செப்.24
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக .த்தில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு நிறைவு நாள் மற்றும் 101 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதையோட்டி தமிழ்ப் பல்கலைக் கழக மொழி புலத்தில் அமைந்துள் ள கவிஞர் தமிழ் ஒளியின் உருவ சிலைக்கு பதிவாளர் (பொ) தியாகராஜன் தலைமையில் பேராசிரியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.
நிகழ்ச்சியில் கலைபுல முதன்மை யர் இளையாப் பிள்ளை, சுவடிப்புல முதன்மையர் கண்ணன், வளருர் தமிழ் புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன், இலக்கியத்துறை தலைவர் தேவி, மொழியியல் துறை தலைவர் மங்கையர்கரசி, மூத்த பேராசிரியர் அரங்கன் கால்டுவெல் இருக்கை பேராசிரியர் நடராஜபிள்ளை உதவி பேராசிரியர் கள் இளையராஜா, தனலட்சுமி, ரமேஷ் குமார், மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



