கன்னியாகுமரி மாவட்டம் கீழ கருப்பக்கோடு ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை கூடுகை நடைபெற்றது . இவ்விழாவில் திருவோண கலாச்சார உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓண பண்டிகை உணவு வகைகளை சமைத்து அனைவரும் உண்டு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். சுஜாதா சாலமன் , இந்திரா லபன், கலா , ஷாலினி ,தமிழ் செல்வி ஆகியோர் ஓன நிகழ்ச்சியை வழிநடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் தி .கோ .நாகேந்திரன் சமூக சேவகர் கலந்து கொண்டு கூறுகையில் அனைத்து பண்டிகைகளும் பரிமாற்றத்திற்காக கொண்டாடப்படுகிறது. எனவே நாமும் நம் அன்பை பரிமாறுவோமாக இல்லாதவர்களுக்கு தேவையான செல்வத்தையும் பொருட்களையும் அறிவையும் பரிமாறுவோமாக இந்தப் பரிமாற்றம் நம் தேசத்தின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்று கூறினார். விழாவிற்கான ஏற்பாட்டை வழக்கறிஞர்கள் ஹரிதாஸ், முஹம்மது பிலால், டல்லஸ் மற்றும் ஜஸ்டிஸ் மில்டன் ஆகியோர் சிறப்புர செய்திருந்தனர்.



