மதுரை செப்டம்பர் 13,
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்க கட்டிடத்தை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.



