திருவள்ளூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு தற்பொழுது அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு ஆண்களுக்கு தனி வார்டு பெண்களுக்கு தனி வார்டு என அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் தற்பொழுது இயங்கி வரும் நிலையில் போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லை என்ற குற்றச்சாட்டு பொது மக்களிடயே எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர் இ.சி.ஜி ஒரு நோயாளிக்கு எடுத்து விட்டு அந்த இசிஜியை வைத்து மற்றொரு நோயாளிக்கு சிகிச்சை பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட மற்ற நோயாளிகளும் நோயாளிகளுடன் வந்தவர்களும் இது குறித்து கேட்ட போது மருத்துவர் அனைவரையும் தரக்குறைவாக ஒருமையில் பேசி அனைவரும் வெளியே செல்லும்படி அதிரடி அலப்பறையில் ஈடுபட்டதாக நோயாளிகள் கூறுகின்றனர். இதில் சந்தேகம் அடைந்த நோயாளிகள் மற்றும் உடன் வந்தவர்கள் மருத்துவரை பார்த்த போது அவர் குடித்துவிட்டு தன்னிலை மறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்ததாக குற்றம் சாட்டி
மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அறிந்த மருத்துவமனை இரவு காவல் பணியில் இருந்த காவலர்கள் மருத்துவரை மீட்டு அங்கிருந்து சென்றனர்.
மேலும் இவர் குறித்து விசாரித்த போது
பொது மருத்துவர் நல்லதம்பி இதற்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த நிலையில் அவரது மனைவி மேற்படிப்பிற்காக திருப்பதி சென்றதால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாறுதல் பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் தற்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது
எனவே மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றும்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகமும் இவர் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



