மதுரை, தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது எழுத்துகளைப் போற்றும் வகையில் தமிழ்த் துறை சார்பில்
கல்லூரி முதல்வர் முனைவர் து. பாண்டியராஜா
தலைமையில்
துறைத் தலைவர் (பொ.) முனைவர் சு.காந்தி துரை
முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில்
பாரதியார் பாடல் வரிகள்’ என்னும் தலைப்பில் சென்னையைச் சேர்ந்த பாரதியியல் ஆய்வாளர் கவிஞர் திருமிகு கடற்கரய் மத்த விலாச அங்கதம் சிறப்புரையாற்றி பாரதியின் வரிகளைப் பற்றி கூறுகையில் பாரதி தமிழ் மொழியின் உன்னதத்தினை தனது கவிதைகளில் பேசியவர். தமிழ் மொழி மட்டுமல்லாமல் மராட்டி வங்க மொழி என இந்திய மொழிகளைத் தன் கவிதைகளில் பாடியவர். தமிழ் மொழியின் மகாகவி என்பதனை பாரதி தான் வாழும் காலத்திலேயே தன் கவிதைகளில் நிரூபனம் செய்தவர்.
தமிழ் மொழியினை தமிழிசையினை தமிழகமெங்கும் எடுத்துச் சென்ற பெரும் புகழுக்குரியவர்.அவரது பாடல் வரிகள் இன்று கற்றோர் மட்டுமின்றி அனைவரும் எடுத்துக்கூறும் அளவிற்கு நீங்கா இடம்பெற்றிருக்கிறது. பாரதியின் கவிக்கும் அவரது படைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என்று பாரதியின் பாடல் வரிகள் குறித்துச் சிறப்பாக உரையாற்றினார்.
இந்த நிகழ்வின் போது இதன் ஒருங்கிணைப்பாளர் து.முத்துகுமார் மற்றும் ப.அன்பரசி ஆகியோர் உட்பட கல்லூரி ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.