திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியில் கழிப்பட்டூர் தனியார் கல்லூரி எதிரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு நிகழ்ச்சியில் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எஸ். ஆர்.எல்.இதயவர்மன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் முட்டுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பி.சங்கீதா மயில்வாகணன் காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி மு.மயில்வாகணன் துணைத்தலைவர் விஜயா கோபிநாத் ஒன்றிய துணைச் செயலாளர் எல்.ஜெயபால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



