நாகர்கோவில் ஆக 28
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வட்டவிளை கலசமிறங்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய நியாய விலை கடை அமைப்பதற்கு. 2019 -2020 _ம் ஆண்டு அன்றைய நாடாளுமன்ற (மேலவை )உறுப்பினர் விஜயகுமார் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி பரிந்துரை செய்யப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்காக கட்டப்பட்ட கட்டிடம் தற்போது வரை திறக்கப்படாமல் இருப்பதாலும், நியாய விலை கடை வாடகை கட்டிடத்தில் செயல்படுவதாலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்றைய தினமே கொண்டு வர வேண்டும் என்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி புதிய கட்டிடத்தின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வந்த நிலையில் நியாய விலை கடை புதிய கட்டிடத்தை திறந்து ரேஷன் பொருள்களை நிரப்பும் பணி நடைபெற்றதால் முற்றுகை போராட்டம் வாபஸ்.
திமுக அரசு பதவிக்கு வந்த நாள் முதல் அரசாணைகள் வெளியிடுவது புதிய திட்டங்கள் அறிவிப்பதும் புதிய கட்டிடங்கள் கட்டுவது என பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட வட்டவிளை பகுதியில் கலசமிறங்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலை கடை புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது ஆனால் இதுவரை திறப்பு விழா செய்யப்படவில்லை இந்த ரேஷன் கடை இப்பகுதியில் வாடகை கட்டடத்தில் இன்னும் இயங்கி வருகிறது. எனவே இந்த கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை உடனே திறந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்ஆர் காந்தி ரேஷன் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29 )-ம் தேதி திறப்பு விழா நடைபெற இருப்பதாகவும் அதன் பின் புதிய கட்டிடத்தில் நியாயவிலை கடை இயங்கும் என தெரிவித்தனர். அதற்கு ஆகஸ்ட் 8-ம் தேதி திறப்பு விழா நடைபெறுவதாக அறிவித்துவிட்டு அந்த தேதியில் திறப்பு விழா நடத்தாமல் 29-ம் தேதி நடத்துவதாக கூறியிருப்பது முற்றிலும் தவறான செயலாகும். எனவே எட்டாம் தேதி திறப்பு விழா நடத்துவதாக அறிவித்துவிட்டு திறப்பு விழா நடத்தாமல் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக திறப்பு விழாவை தள்ளி வைப்பதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே இன்றைய தினம் நியாய விலை கடையில் பொருள்களை நிரப்பி நாளை மறுநாள் திறப்பு விழாவை நடத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். அதை அதிகாரிகளும் ஒத்துக் கொண்டதால் அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுக்கு வந்தது. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்ட நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய முற்றுகை போராட்டத்தை விலக்கிக் கொண்டார். நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுனில், பாஜக நிர்வாகி சந்திரசேகர் மற்றும் தொண்டர்கள் என ஏராளமனோர் இருந்தனர்.