கம்பம். ஆக.23:
தேனி மாவட்டம் கம்பம் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தேவசேனா சமேத, ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்ரீ பைரவர், ஸ்ரீ நவகிரக மற்றும் பரிவார சகித ஸ்ரீ சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்கள் பூர்த்தி ஆனதை அடுத்து மீண்டும் ச சிலைகள் திருப்பணி நிறைவுற்று கும்பாபிஷேக விழா நேற்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவினை திருக்கோவில் முருக பக்தர் சபை தலைவர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. இராமகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். தேனி பாராளுமன்ற உறுப்பினர்,தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முதலாவதாக திங்கட்கிழமை காலை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம்,நவகிரக ஹோமத்துடன் விழா துவங்கியது. முதற்கால யாக வேள்விகள் துவக்கம், இரண்டாம் கால யாக கேள்விகள் துவக்கம்,மூன்றாம் கால யாக வேள்விகள் துவக்கம் நான்காம் கேள்விகள் யாக துவக்கம் என பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுப கண்ணியா லக்னத்தில், நிஷ்பஞ்சக ஜெப வேளையில் ஸ்ரீ சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர மகா கும்பாபிஷேகம்,அதனைத் தொடர்ந்து காலை 11 மணி மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று பொதுமக்களுக்கு மற்றும் பக்த கோடிகளுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையை துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர், உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய,நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள், திருக்கோவில் முருக பக்தர் சபை நிர்வாகிகள்,அனைத்துக் கட்சி முக்கிய பிரமுகர்கள்,துறை சார்ந்த அதிகாரிகள்,ஆன்மீக அன்பர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கம்பம் நகர் வாழ் அனைத்து சமுதாய பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கி விழா சீரும் சிறப்புமாக நிறைவு பெற்றதற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். இந்த விழாவிற்கு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறையினர், சுகாதாரத் துறையினர் என பல்வேறு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
கும்பாபிஷேக ஆகம முறைப்படி நடத்தியவர் சிவா ஸ்ரீ ஜவகர் என்ற சதாசிவ குருக்கள் தலைமை அர்ச்சகர் அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோவில் அர்ச்சகர், ஸ்பதி, கொத்தாளமுத்து,யாகசாலை ஸ்தபதி சத்திய நாராயணன்,சிறப்பாக செய்திருந்தனர்.