அரியலூர், ஆக;19
அரியலூர் மாவட்டம்,செந்துறை
முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு இலங்கைச்சேரி கிராமத்தில் எழுந்தருளி உள்ள மாரியம்மன் கோவிலில் வருடம் வருடம் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் ,தமிழ் ஆடி மாதம் புதன் கிழமை திருவிழா நடத்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவராலும் ஆலோசிக்கப்பட்டு மாரியம்மன் கோவிலில் திருவிழாவில் சாமி எடுக்க பந்தல் கால் முகூர்த்த கால் நட்டு ஊரின் மேற்கு பகுதியில் காட்டில் எழுந்தருளி மக்களை காத்து வரும் ஸ்ரீ ஆயிமுத்தாயி அம்மன் கோவிலுக்கு சென்று ஆயிமுத்தாயி அம்மனுக்கு பொங்கலிட்டு படையல் செய்து பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெரியோர்கள் அனைவரும் தங்கள் கைகளில் (மஞ்சல் கட்டி)காப்பு கட்டி விருதம் இருந்து 5 நாட்கள் சாமி வீதியுலா நடைபெற்று வந்தது.ஐந்தாம் நாளான நேற்று மஞ்சல் விளையாட்டு நடைபெற்று இறுதியாக கூழ் கிண்டி மக்களுக்கு அளித்ததனர். இதனைத்தொடர்ந்து இறுதியாக ஆயிமுத்தாயி அம்மனை காட்டு கோவில் கொண்டு சேர்க்கும் விதமாக தூக்கி கொண்டு சென்று சேர்த்து காப்பு அவிழ்க்கும் நிகழ்வு நடைபெற்று பின்னர் ஊரில் மாரியம்மன் கோவிலில் படையல் செய்து தீபாராதனை காண்பித்து பக்தர் தரிசனம் செய்து திருவிழா நிறைவுபெற்றது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்