சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குருவிகுளம் தெற்கு ஒன்றியத்திக்கு உட்பட்ட கே.கரிசல்குளம் கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான கழுகுமலை முதல் கே.கரிசல்குளம் வரையிலான தார்ச்சாலையினை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கையினை ஏற்று ராஜா எம்எல்ஏ உரிய அதிகாரிகளிடம் பேசி நிதி ஒதுக்கீடு பெற்று ரூ 3.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார். நிலையில் இந்நிலையில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குருவிகுளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கடற்கரை தலைமை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் திமுக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



