தென்காசி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியிலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ,சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். உயர்கல்வியில் பெண்களின் செயற்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப்புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 -ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000/-உதவித்தொகை அளிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் இத்திட்டம் கோயம்புத்தூரில் வைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளி படிப்பில் அரசு பள்ளியில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் சுமார் 2.72 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 4301 கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் குடும்பத்தின் ஏழ்மை நிலைமை காரணமாக உயர்கல்வியினை தொடர இயலாத மாணவர்கள் உயர் கல்வி இலக்கினை அடைய இயலும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன் திருநெல்வேலி அரசு தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் மார்ஜாரி ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா, உதவி இயக்குநர்(திறன்மேம்பாடு) தியோடர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கண்காணிப்பாளர் காட்வின் வேத ஞானராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.