திருப்பூரில் இருந்து வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள்
இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது .
ஆக.8
திருப்பூரில் உள்ள இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பு சார்பில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 30 ஆம் தேதி நடந்த நிலச்சரியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்,
3000 – க்கும் மேற்பட்டேர் பல்வேறு இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,
இவர்களுக்கு உதவி செய்யும் வகையில்
திருப்பூரில் இருந்து கம்பளி, பெட்சீட், குழந்தைகள், பெண்கள், புதிய ஆடைகள், மருத்துவ பொருட்கள் அடங்கிய தொகுப்புகள்
350 குடும்பங்களுக்கு
5 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது இந்த நிகழ்வில்
மாநில ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன்,
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
எம். சாதிக், புதுச்சேரி மாநில நிர்வாகி சிவச்சந்திரன் அப்துல்லா லத்தீப் காசிம் கொங்கு மண்டல பொறுப்பாளர்
N.K முகமது (எ) வாசித் கிர்மானி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நடராஜ் ஹாஜா முகமது உசேன் ஜெயின்னுலாபுதீன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.