கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வாணிப்பட்டி சூளகரை ஆனந்தூர் வீராட்சிகுப்பம் ஆகிய ஊராட்சியைச் சேர்ந்த
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாணிப்பட்டி ஊராட்சி அம்மன் கோயில்பதி பெருமாள் கோவில் அருகில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டது,
இந்த முகாமில் புதிய மின் இணைப்பு,மின் கட்டணம் மாற்றங்கள்,மின் இணைப்பு பெயர் மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள் ,
வருவாய் துறை சார்பில் பட்டா மாறுதல்,பட்டா உட்பிரிவு இணைய வழி பட்டா நில அளவீடு வாரிசு சான்றிதழ் சாதி சான்றிதழ் போன்ற சேவைகள் மனு வழங்கி முப்பது நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என இந்த மக்கள் குறைதீர் முகாமில் கூறப்படுகிறது,
இந்த முகாமில்
ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயலட்சுமி பெருமாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய செயலாளருமான கே.ஆர்.கே.நரசிம்மன் கலந்து கொண்டு
முகாமை துவக்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் எஸ்எஸ்.சங்கர் குண.வசந்தரசு மற்றும்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பழகன், செல்வி ராதாகிருஷ்ணன், பவித்ரா சிலம்பரசன், சி.நடராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் மதிமுக மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் விஜயலட்சுமி மஞ்சுநாதன் லட்சுமி கிருஷ்ணன்
மற்றும் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால், மின்சார துறை, உதவி பொறியாளர் மோகன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னுசாமி, குணசேகரன், உமா, ஜெய்சங்கர் ஊராட்சி செயலாளர்கள் சுரேஷ், பூபதி, மூர்த்தி, அண்ணாதுரை , மற்றும் மின்சாரத்துறை சுகாதாரத்துறை வேளாண்மை துறை வருவாய் துறை தோட்டக்கலைத் துறை சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர் சில மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது



