தஞ்சாவூர் ஆகஸ்ட். 4.
தஞ்சாவூர் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர்பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு செய்தார்.
பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு,பேறு கால பகுதி, சிசு பராமரிப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்ற உயர் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
குழந்தைகள் நலப்பிரிவு, சிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டார்.பின்னர் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத் தில் பச்சிளம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், கர்ப்பிணி தாய்மார் களின் இறப்பு மற்றும் சிசு இறப்பு விகிதத்தை கவனமுடன் கண் காணித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்தும், மருத்துவ அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்தா லோசனை மேற்கொண்டார்
கூட்டத்தில் உதவி ஆட்சியர் உத்கர்ஷ் குமார்,மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ,சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர். கலைவாணி, நிலை மருத்துவர் மற்றும் மகப்பேறு துணை தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்