வேலூர்_01
வேலூர் மாவட்டம் அகில இந்திய கட்டுமான அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேலூர் மாவட்டம் சார்பாக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் கூட்டமைப்பு தலைவர் கே பி பாஸ்கரன் கௌரவத் தலைவர் டிஎன் வெங்கடேசன் ஆகிய தலைமையில் நடைபெற்றது இதில் நிறுவனத் தலைவர் ஆர்.டி.பழனி கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து வாழ்த்துரையாற்றினார். கட்டுமானம் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு வழங்க ஓய்வூதியம் 1200/- லிருந்து ரூபாய் 5000/- ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் 6அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அகில இந்திய கட்டுமான அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் வேலூர் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.