சின்னமனூர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் தற்பொழுது தமிழகத்தில் உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை உடனே நிறுத்த கூறி திமுக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சின்னமனூர் ரவுண்டானாவில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டனர். இதில் மாவட்ட ,நகர, ஒன்றிய, மகளிரணி நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.