சிவகங்கை , ஜூலை – 23
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒழுகமங்கலம் கிராமத்திற்கு சொந்தமான கண்மாயை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கண்மாய் கரையில் இருந்த முதிர்ந்த வேப்பமரம் புளியமரம் மற்றும் பனை மரங்களை அரசு அனுமதியான கட்டிங் ஆர்டர் பெறாமல் பஞ்சாயத்துத் தலைவர் சுந்தர மகாலிங்கம் என்பவர் மரங்களை வெட்டி விட்டதாகவும் அவற்றை வெளியில் கொண்டு போய் விற்பனை செய்ததாகவும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர் .
அதன் பின்னர் கிராமப் பொதுமக்கள் இது தொடர்பாக கூறுகையில் மரங்களை அரசு அனுமதி இல்லாமல் வெட்டியது குறித்து பஞ்சாயத்து தலைவர் மீது அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் நெற்குப்பை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது . இந்தப் பணம் அரசிற்கு போய்ச் சேர வேண்டும் அதன் மூலம் எங்கள் கிராமத்திற்கு பல நல்ல பணிகளைச் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை கேட்டுள்ளோம் என்று கூறினார்கள்.


