உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார். முன்னதாக ஏராளமான மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு வாகனம் முன் செல்ல மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி முக்கிய பகுதிகள் வழியாக சென்று இறுதியாக தருமபுரத்தில் நிறைவடைந்தது.



