மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு பெண் சமூக ஆர்வலர் நாச்சியார் குழுமத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து திருமங்கலம் தேவர் சிலை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சமூக ஆர்வலர் ஜீவிதா நாச்சியார் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட்களை வழங்கி ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீமான் மற்றும் போக்குவரத்து துறை போலீசார் உட்பட நாச்சியார் குழும நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.