தேனி மாவட்டம், ஜூலை – 16 தேனி மாவட்டம், கல்வி கண் திறந்த காமராஜரின் 122 – பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் அவர்கள் தலைமையில் பி.சி.பட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி அவர்களின் முன்னிலையில் தேனி நகர காங்கிரஸ் கட்சியினர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு பொதுமக்கள் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்நிகழ்வில் தேனி நகரம் ஒன்றியம் கிளையின் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்



