அவிநாசி ஜூலை:12
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஊஞ்சப்பாளையத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவ தலைவன் / தலைவி பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில்
அவிநாசிகாவல் ஆய்வாளர்
V. இராஜவேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மேலும் இவ்விழாவில், பள்ளியின் தாளாளர்
S. சரவணன் அவர்களும் மற்றும் இயக்குநர் ( குரூப் கேப்டன் )G.S. வோஹ்ரா அவர்களும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் மாணவ-மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும்,
இவ்விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட
குழந்தைகள் பதவிப் பிரமானம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகள் துப்பாக்கி சுடுதல் மற்றும் கயிறு ஏறுதல் போன்றவற்றை செய்துகாட்டியதற்கு திரளான பெற்றோர்கள் தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.