திண்டுக்கல்: ஜூலை-03
ஆதித்தமிழர் அருந்ததியர் முன்னேற்ற கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் கே.எஸ். சத்தியசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மாவட்டத் தலைவர் சின்னக்காளை முன்னிலை வகித்தார் செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றியடைய ஆதித்தமிழர் அருந்ததியர் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்து வெற்றி பெற பாடுபட்டோம் எனவே வருகின்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இக்கூட்டத்தில் தலித் அருந்ததியர்கள் அமைப்புகளின் தலைவர்கள் முத்துகிருஷ்ணன்,ஜெயக்குமார்,செல்வகுமார், பழனியப்பன், பாலாஜி, ஈஸ்வரன்,ராஜி, சுந்தரம்,குமார், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கூட்டம் முடிவில் மாவட்ட அமைப்பாளர் கோபால் நன்றி உரையாற்றினார்.



